ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது தனது திரைப்பயணத்தில் மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதாக நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘தர்மன்’ படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வரும் அவர், படப்பிடிப்புத் தளத்தில் இருவருக்கும் இடையே உருவான நட்பைப் பற்றிப் பேசியுள்ளார்.
“படப்பிடிப்பில் ரஜினிகாந்த் எனக்கு ஒரு நல்ல நண்பரைப் போல மாறிவிட்டார். அவரிடம் நிறைய பேசுவேன். அடிக்கடி கேள்விகள் கேட்டு அவரைத் தொந்தரவு செய்வதும் உண்டு. ஆனாலும், அவர் மிகவும் எளிமையானவர். நான் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளிப்பார்.
அவர் அருகில் இருக்கும்போது என்னை ஒரு குழந்தையைப் போல உணர்கிறேன். ‘தர்மன்’ படப்பிடிப்பில் இருப்பதை மிகவும் ரசித்து வருகிறேன். ரசிகர்களைப் போலவே நானும் இப்படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.
