Advertisement

ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரத் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

‘சிவா மனசுல சக்தி’ படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குநர் ராஜேஷும் ஜீவாவும் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். ‘பரிதாபங்கள்’ புகழ் சுதாகரும் முக்கியக் கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.

படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழும் கிடைத்துள்ளதால் வெளியீட்டுக்கான பணிகள் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளன. இதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஜீவா நடித்துள்ள ‘தகப்பன்’ திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

Add a Comment

Leave a Reply