Advertisement

57வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வான ‘ஸ்க்ரோல்’!

பாஸ்வேர்டு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ள திரைப்படம் ‘ஸ்க்ரோல்”. அரவிந்த் சுந்தர், காவ்யா அனில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேகா ராஜன், ‘கொட்டுக்காளி’ முருகன் கோவிந்தசாமி, ‘விக்கல்ஸ்’ சிபி, பொற்கொடி, சுரேந்தர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கே16 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI 2026) ‘Indian Panorama’ பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.

இந்த படத்தின் முழு கதையையும் நாயகனின் செல்போன் திரை வழியாகச் சொல்லும் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு அடிமையாவதை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையின் வழியாகப் பேசுகிறது.

ஜோகன், தினகர் இசையமைத்துள்ளனர். .நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் IFFI 2026 விழாவில் இப்படம் உலக அளவில் முதன்முறையாகத் திரையிடப்படுகிறது. அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply