இயக்குநர் கே.பி. ஜெகன் இயக்கியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தில் கே.பி. ஜெகன், விஜய் வர்மா, எம்.எஸ். பாஸ்கர், சனாஷ்கா ஸ்ரீ, மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, ‘உறியடி’ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுக. செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். மணிகண்டன் சிவக்குமார் படத்தொகுப்பையும், வீரசமர் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமா என்ற அடையாளத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ளது. பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து வழங்குகின்றன. ஆடியோ உரிமையை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளது.
படத்தின் அறிமுக வீடியோ ஏற்கெனவே வெளியாகி இணையத்தில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, ‘எங்கெங்கோ தேடிப் போனேன்… ஏதேதோ நாடி போனேன்…’ எனத் தொடங்கும் முதல் பாடலையும், அதற்கான பிரத்யேக வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் சக்தி உமா பாலகிருஷ்ணா எழுதியுள்ள இந்தப் பாடலை மறைந்த தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார். அவர் மறைவதற்கு முன்பு குரல் பதிவு செய்த கடைசிப் பாடல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
