Advertisement

சிறுவயதில் நான் வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டேன் – ஸ்ருதிஹாசன் பகிர்ந்த ஆச்சரியான தகவல்!

ஸ்ருதிஹாசன், நடிகை மட்டுமின்றி பாடகி, இசையமைப்பாளர் எனப் பல துறைகளிலும் இயங்கி வருகிறார். குழந்தை நட்சத்திரமாக ‘ஹே ராம்’ படத்தில் அறிமுகமான இவர், ‘லக்’ என்ற இந்திப் படத்தின் மூலம் கதாநாயகியானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டியில் தனது சிறுவயது உணவுப் பழக்கங்கள் குறித்துப் பேசிய ஸ்ருதிஹாசன், தந்தை கமல்ஹாசன் சமைத்துக் கொடுத்த பல வித்தியாசமான உணவுகளைச் சாப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “சிறுவயதிலேயே முதலை, ஒட்டகம், கடல் குதிரை உள்ளிட்டவற்றின் இறைச்சியைச் சாப்பிட்டிருக்கிறேன். குட்டி ஆக்டோபஸ் எனக்கு மிகவும் பிடித்த உணவு. ஒருமுறை குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தபோது, குழம்பில் கடல் குதிரை இருந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். அதுவரை கடல் குதிரைகள் உண்மையிலேயே இருக்கும் என்பதே எனக்குத் தெரியாது” என்று சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply