கிரீஸ் நாட்டில் நடைபெற்ற காவ்யா மாறன் – அனிருத் திருமண விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்று திருமண வாழ்த்து தெரிவித்தது குறித்து உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், சன் நெட்வொர்க்கின் செயல் இயக்குநருமான காவ்யா மாறன் – இசையமைப்பாளர் சகோதரர் அனிருத் ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம். இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா – அனிருத் இணையர் தமிழ் போல், இசை போல் பல்லாண்டு வாழ்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Add a Comment
