கடந்த டிசம்பரில் இயக்குநர் ராஜ் நிடிமொருவைத் திருமணம் செய்துகொண்ட சமந்தா, தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வந்தார். ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் வெளியீட்டின்போது தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், நவம்பர் 19-ம் தேதி சமந்தாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் கைகளைப் பிடித்தபடி முகம் தெரியாத புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், “எங்களது அழகிய பையன் தேவ் நிடிமொரு” என மகனின் பெயரையும் அறிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Add a Comment
