பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவுத்தேலா, கவர்ச்சி நடனங்கள் மூலமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தமிழில் ‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்துள்ள இவர், தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக, குத்துப்பாடல்களில் இவரது நடனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மீண்டும் தமிழில் நடிப்பதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து வரும் அவர், அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகைகள் சந்திக்கும் விமர்சனங்கள் குறித்து ஊர்வசி ரவுத்தேலா தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நடிகர்கள் என்ன செய்தாலும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் நடிகைகள் விஷயத்தில் அப்படி நடப்பதில்லை. தெரியாமல் ஒரு தவறு செய்தாலும் அதைப் பெரிதுபடுத்தி விமர்சிக்கிறார்கள். இதனால் நடிகைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
நடிகர்களைவிட நடிகைகள்தான் விமர்சனங்களுக்கு அதிகம் அஞ்சி வாழ்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகைகளைக் கொண்டாட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் அவர்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்காமல் இருந்தாலே போதும்” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்துகள் தற்போது கவனம் பெற்று வருகின்றன.
