அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கியுள்ள ‘கூடு’ திரைப்படத்தில் விஜே கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மனோஜ் கிருஷ்ணா இசையமைத்துள்ளார். பனோரமா ஸ்டூடியோஸ், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது.
தமிழகக் கிராமம் ஒன்றில் நடந்த உணர்வுப்பூர்வமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. அரிய வகைப் பறவை ஒன்று மின்மாற்றிக்குள் முட்டையிட்டு கூடு கட்டுகிறது. அந்தக் கூட்டையும் குஞ்சுகளையும் பாதுகாக்க கிராம மக்கள் 35 நாட்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்க முடிவெடுக்கின்றனர்.
கிராம மக்களின் ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் எடுத்துரைக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
