Advertisement

ஒரே இரவில் நடக்கும் மர்ம சம்பவங்கள்… ‘மின்னும் ஓர் இரவு’ டிரெய்லர் வெளியீடு!

இனிகோ பிரபாகர் கதாநாயகனாக நடித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி. ராபர்ட் ராஜ் தயாரித்துள்ள இப்படத்தை சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார். இனிகோ பிரபாகருக்கு ஜோடியாக அஞ்சு கிருஷ்ணா அஷோக் நடித்துள்ளார். சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார்.

நண்பர்கள் குழுவினர் இரவு நேரப் பொழுதுபோக்கிற்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்கின்றனர். அங்கு எதிர்பாராத சம்பவங்களில் சிக்கிக்கொள்கின்றனர். ஒரே இரவில் நடக்கும் இந்தச் சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்மம், திகில் நிறைந்த காட்சிகளுடன் வெளியாகியுள்ள டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply