தமிழில் வெளிவந்த‘சென்னை 28’, ‘சரோஜா’, ‘கோவா’ படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த வைபவ், ‘கப்பல்’ மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் பிரியா பவானி சங்கருடன் ‘மேயாத மான்’ படத்தில் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ஐயப்பனை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மணிகண்டா’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் வைபவ். இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘மாளிகைப்புரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். தாந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில், வெங்கட் பிரபு கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.
ஐயப்பன் வேடத்தில் வைபவ் இடம்பெற்ற படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. தற்போது டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் டிசம்பர் மாதம் பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.
