‘பொலிமேரா 3’ படத்தில் இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் அர்ஜுன்… வெளியான போஸ்டர்!

முதல் இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘பொலிமேரா’ திரைப்படத்தின் அடுத்த பாகம் தயாராகி வருகிறது. விரைவில் வெளியாகவுள்ள ‘பொலிமேரா 3’ படத்தில் வீராவி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்ஜுனின் தோற்றத்தைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தை வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வம்சி நந்திபாடி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. நிறுவனத்தின் பரத் நரங்குடன் இணைந்து தயாரிக்கிறார். அனில் விஸ்வநாத் இயக்கியுள்ள இப்படம், முந்தைய பாகங்களின் கதையுலகத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்ட அர்ஜுனின் ஃபர்ஸ்ட் லுக், அவரது மாறுபட்ட தோற்றத்தைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருப்பதால், அந்தப் புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply