‘தர்மன்’ படத்தில் அனைத்து நாயகிகளுக்கும் வலுவான கதாபாத்திரம்! – அஸ்வத் மாரிமுத்து

ரஜினிகாந்த் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் திரைப்படம் ‘தர்மன்’. ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா, சிம்ரன், ராஷி கண்ணா, ஸ்ரீலீலா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவையும், பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி வில்லனாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பல கட்டங்களாக நடைபெற்று வரும் இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து புகைப்படங்களுடன் அறிவித்திருந்தார். 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய ஒரு பேட்டியில், சிம்ரன், ராஷி கண்ணா, நயன்தாரா, ஸ்ரீலீலா எனப் பல நாயகிகள் இருக்கிறார்களே, இவர்களுக்கு எப்படிச் சமமான வாய்ப்பளிப்பீர்கள்? என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அஸ்வத் மாரிமுத்து, அனைவருடைய கதாபாத்திரங்களுக்குப் பின்னாலும் ஒரு வலுவான கதை இருக்கும். அப்படித்தான் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன்” என்றார்.

Add a Comment

Leave a Reply