அனிருத் – காவ்யா மாறன் திருமணக் கொண்டாட்டத்தில் உற்சாகமாக நடனமாடிய ரஜினிகாந்த்!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் நவம்பர் 11-ம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமணக் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த், அனிருத் இசையமைத்த ‘பேட்ட’ படத்தின் ‘மரண மாஸ்’ மற்றும் ‘வேட்டையன்’ படத்தின் ‘மனசிலாயோ’ பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Add a Comment

Leave a Reply