சூர்யாவின் ‘சீன்’ படத்தைப் பாராட்டிய இயக்குனர் அட்லீ!

மலையாளத்தில் ‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜீத்து மாதவன், சூர்யாவை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘சீன்’. இதில் நஸ்ரியா, நஸ்லன், லால் மற்றும் லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைச் சம்பாதித்துள்ளது. இந்தச் சூழலில், படத்தைப் பார்த்த இயக்குநர் அட்லீ தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

அட்லீ தனது சமூக வலைதளப் பதிவில், “நீண்ட காலத்திற்குப் பிறகு ரசிக்கும்படியான ஒரு கமர்ஷியல் திரைப்படத்தைப் பார்த்திருக்கிறேன். ஜீத்துவின் கதைகள் மீது எனக்கு எப்போதுமே பெரிய ஈர்ப்பு உண்டு. ஆனால், இந்தப் படம் தனித்துவமான அனுபவமாக அமைந்துள்ளது. சூர்யாவின் நடிப்பு அசத்தலாக இருக்கிறது. நஸ்லனைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது… என்ன ஒரு நடிகர்! ஒரு சூப்பர் ஸ்டார் உருவாகிக் கொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் அவர் நிச்சயமாக இந்தத் திரையுலகை ஆளப்போகிறார்.

நஸ்ரியாவின் நகைச்சுவையும், அவரது குறும்புத்தனமான நடிப்பும் மிகவும் அருமை. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உண்மையிலேயே உற்சாகமான ஒரு பயணம்… என்ன ஒரு திரைப்படம்!” என்று குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

Add a Comment

Leave a Reply