‘ஃபேமிலி பாய்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘சரியா.. சதியா…’ பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிர்மல் ஜே.பி. இசையமைத்துள்ளார். ஜிஜேந்திரன்.வி படத்தொகுப்பையும், சி.கே. முஜிபுர் ரஹ்மான் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply