‘கிங் 100’ படத்தில் அசோக் செல்வனின் மிரட்டலான லுக்!

நாகார்ஜுனா அக்கினேனியின் 100-வது திரைப்படமாக உருவாகும் ‘கிங் 100’ படத்தில் அசோக் செல்வனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்தப் போஸ்டரில், ‘கர்ணா’ என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் அசோக் செல்வன் இடம்பெற்றுள்ளார்.

‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ படங்களை இயக்கிய ர. கார்த்திக் இப்படத்தை எழுதி இயக்குகிறார். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாகார்ஜுனாவுடன் அசோக் செல்வன், தபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் நூலி படத்தொகுப்பையும், என். சதீஷ்குமார் தயாரிப்பு வடிவமைப்பையும் கவனிக்கின்றனர். இப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply