இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாகப் பணிகளையும் கவனித்து வரும் காவ்யா மாறனை அனிருத் மணக்க உள்ளார். இவர்களது திருமண விழா கிரீஸ் நாட்டில் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
இதில் கலந்துகொள்ளும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் சென்னையிலிருந்து கிரீஸ் புறப்பட்டுள்ளார். அவர் விமானத்தில் பயணம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வெளிநாட்டில் நடைபெறும் அனிருத் திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சென்னையில் நவம்பர் 21-ம் தேதி வரவேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அரசியல், தொழில் மற்றும் கிரிக்கெட் துறை பிரபலங்களும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
