தீபாவளியன்று மாடர்ன் உடையில் கவனம் ஈர்த்த ஜொனிதா காந்தி – வைரல் புகைப்படங்கள்!

அனிருத் இசையமைப்பில் வெளியான ‘செல்லம்மா செல்லம்மா’, ‘ஹலமிதி ஹபிபோ’, ‘பிரைவேட் பார்ட்டி’ எனப் பல பிரபலமான பாடல்களுக்கு குரல் கொடுத்தவர் பாடகி ஜொனிதா காந்தி. மேற்கத்திய செவ்வியல் இசை மற்றும் இந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்ற இவர், தனது இசைப் பயணத்தை முதலில் பாலிவுட்டில் தொடங்கினார். பின்னர், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் மூலம் தமிழில் பாடத் தொடங்கிய அவர், தற்போது முன்னணி பின்னணிப் பாடகிகளில் ஒருவராகத் திகழ்கிறார்.

தமிழில் ஜொனிதா பாடிய பல பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இசைத்துறையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அவர், பாடல்களுடன் தனது ஆடைத் தேர்வு மற்றும் மாடலிங் புகைப்படங்கள் மூலமாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்ட பிரம்மாண்டமான தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவரும் பங்கேற்றுள்ளார்.

பொதுவாகத் தீபாவளி நிகழ்ச்சிகளில் அணியப்படும் பாரம்பரிய ஆடைகளைத் தவிர்த்து, இந்த முறை நவீன பாணியிலான கவர்ச்சி உடையைத் தேர்வு செய்திருந்தார் ஜொனிதா. அந்த நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது அந்தப் படங்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், ஜொனிதாவின் ரசிகர்கள் பலரும் தங்களது விருப்பங்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply