முதல்வர் விஜய் மீண்டும் கேமரா முன்பு நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட உள்ள விளம்பரம் ஒன்றில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விளம்பரத்தை இயக்குநர் கவுதம் மேனன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கான படப்பிடிப்பு இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
Add a Comment
