SK27 பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு ஐபோன் பரிசளித்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான ‘SK27’ இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு புதிய ஐபோன் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.

இந்தப் பரிசைப் பெற்ற புகைப்படங்களை இயக்குனர் ராம்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “சிவகார்த்திகேயன் அண்ணாவிடமிருந்து எதிர்பாராத அன்பான பரிசு கிடைத்தது. இதற்கு மிக்க நன்றி அண்ணா. இந்தப் பரிசு எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ‘SK27’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக காயடு லோஹர் நடிக்கிறார். மேலும், சுதாகர், வி.டி.வி கணேஷ், ஜார்ஜ் மரியன், பப்லு பிரித்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply