சூர்யா நடிப்பில் ஜீத்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படம் வரும் 6-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் தனக்கு ‘தி ஒன்’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளதாகவும், பட்டங்களை விரும்பாவிட்டாலும் ரசிகர்களுக்காக அதை ஏற்றுக்கொள்வதாகவும் சூர்யா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் ‘தி ஒன்’ பட்டத்தின் அர்த்தம் குறித்து அவர் விளக்கமளித்தார். “நான் மட்டுமே ‘தி ஒன்’ கிடையாது. நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதால்தான் அந்தப் பெயர் உருவாகிறது. இது எனக்கான பட்டம் அல்ல; நம் அனைவரையும் குறிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பம். பல ஆண்டுகளாக நம்மிடையே இருக்கும் அன்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது” எனத் தெரிவித்தார்.
