அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ராக்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், கொரியன், சீனம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனங்களின் மேற்பார்வையில் பிரம்மாண்ட காட்சிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கும் இப்படத்தில் மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா லட்சுமி வில்லியாக நடிப்பதாகத் தகவல் பரவியது. ஆனால், ‘ராக்கா’ படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், படக்குழுவினர் தன்னை அணுகவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கிடையே, மும்பையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு அடுத்ததாக ஹைதராபாத்தில் தொடரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதலில் துபையில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்த அட்லி, பாதுகாப்பு காரணங்களால் ஹைதராபாத்தைத் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
