தேவயானி மகள் பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’!

நடிகை தேவயானி மற்றும் இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியரின் மகள் பிரியங்கா ராஜகுமாரன், கதாநாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் திரைக்கு வருவதற்கு முன்பே தனது அடுத்த படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் அமல் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், சமூக வலைத்தளங்களில் தனது வீடியோக்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர். இப்படத்தைச் செம்பர் வி. முருகேசன் இயக்குகிறார்.

இன்றைய இளைஞர்களைக் கவரும் அழகான காதல் கதையுடன், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading