மார்டன் ஆடையில் அதிதி ஷங்கர் பதிவிட்ட புகைப்படங்கள் வைரல்!

திரைப்படங்களில் நடிப்பதுடன் மருத்துவக் கல்வியையும் நிறைவு செய்தவர் நடிகை அதிதி ஷங்கர். இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகளான இவர், கார்த்திக்கு ஜோடியாக நடித்த ‘விருமன்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்தில் நடித்தார். தொடர்ந்து ஆகாஷ் முரளியுடன் ‘நேசிப்பாயா’ திரைப்படத்திலும், அர்ஜுன் தாஸுடன் ‘ஒன்ஸ் மோர்’ படத்திலும் நடித்துள்ளார். இதில் ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதிதி ஷங்கர் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று, 2021-ம் ஆண்டு தனது படிப்பை நிறைவு செய்தார். நடிப்புத் துறையில் பயணித்தாலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அதிதி ஷங்கர் மார்டன் ஆடையில் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Add a Comment

Leave a Reply