பிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கிறாரா நடிகை திவ்ய பாரதி? – இணையத்தில் பரவும் தகவல்!

‘பேச்சுலர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்ய பாரதி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. பின்னர் ‘மதி மேல் காதல்’, ‘மகாராஜா’, ‘கிங்ஸ்டன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதற்கிடையே, தெலுங்கிலும் தொடர்ந்து வாய்ப்புகளைத் தேடி வரும் திவ்ய பாரதி, இயக்குநர் நரேஷ் குப்பிலியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகியதாகக் கூறப்படுகிறது. அந்தப் படத்திலிருந்து இயக்குநரும் வெளியேறியதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக்கும் திவ்ய பாரதியும் காதலித்து வருவதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 26 வயதான உம்ரான் மாலிக் இந்திய அணியில் இடம்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 34 வயதான திவ்ய பாரதியுடன் அவர் காதலில் இருப்பதாக வெளியாகியுள்ள இந்தத் தகவல் குறித்து இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading