சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதையடுத்து, அவரது 27-வது படத்தை ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்தில் கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், அக்டோபர் 12-ம் தேதி மாலை புதிய அப்டேட் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் படத்திற்கு முதன்முறையாக சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர், சூர்யா, அல்லு அர்ஜுன், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading