அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான ‘மொதா ராத்திரி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் வெற்றியைப் பதிவு செய்தது. ஓடிடியில் வெளியாகி 20 நாட்களைக் கடந்த நிலையிலும், சில திரையரங்குகளில் குறிப்பிட்ட காட்சிகளில் இப்படம் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘மொதா ராத்திரி’ நாளை 50வது நாளை தொடங்குகிறது. இதையொட்டி சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில் நாளை சிறிய அளவில் 50வது நாள் விழா நடைபெற உள்ளது.
Add a Comment
