Advertisement

ரசிகர்கள் வேண்டுகோளால் ஐமேக்ஸில் வெளியாகும் ‘மண்டாடி’!

சூரி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு தற்போது மற்றொரு சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான பிறகு வசூல் ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்தது. தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கும் அதிகமாகவும், உலக அளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்துள்ளதாகவும் படக்குழு கூறியுள்ளது.

இந்த நிலையில், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ‘மண்டாடி’ திரைப்படத்தை ஐமேக்ஸ் திரைகளில் மீண்டும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனை நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். அக்டோபர் 9-ம் தேதி முதல் ஐமேக்ஸ் மற்றும் பிவிஆர் பலாஸோவின் பெரிய திரைகளில் இப்படத்தை ரசிகர்கள் காணலாம் என அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, ‘மண்டாடி’ திரைப்படம் அக்டோபர் 8-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது. திரையரங்க வெற்றியைத் தொடர்ந்து ஐமேக்ஸ் வெளியீடும், ஓடிடி வெளியீடும் ஒரே நேரத்தில் கவனம் பெற்றுள்ளதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

Add a Comment

Leave a Reply