“வருமான வரித்துறை சோதனைக்கும் எனக்கும் தொடர்பா? ரகுல் ப்ரீத் சிங் மறுப்பு!

சமீபத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை முன்வைத்து தனது பெயர் தொடர்பான செய்திகள் வெளியாகி வருவதற்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மைகளை சரிபார்க்காமல் பரபரப்புக்காக சிலர் செய்திகளை வெளியிடுவது மனவேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். ஆயுதப் படைகளின் பின்னணியில் இருந்து திரைத்துறைக்கு வந்த தான், எந்தவிதமான சினிமா பின்புலமும் அல்லது காட்பாதரும் இல்லாமல் கடின உழைப்பால் முன்னேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

20 வயது முதல் முறையாக வரி செலுத்தி வரும் பொறுப்புள்ள சட்டத்தை மதிக்கும் குடிமகள் தான் என்றும் ரகுல் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையிலோ, எந்தவொரு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பிலோ சட்டவிரோத வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதில்லை என்றும், இந்தியா அல்லது வெளிநாடுகளில் வேறு யாருக்காகவும் பினாமி சொத்துகளை வைத்திருக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். தனக்கு யாரும் எந்த சொத்தையும் பரிசாக வழங்கியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தன்னைப் பற்றி தீய நோக்கத்துடன் வெளியிடப்பட்ட ஊகச் செய்திகளை சம்பந்தப்பட்டவர்கள் திரும்பப் பெற்று உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading