நடிகை சுருதிஹாசன் பிசியான நடிகையாக பல திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பு மட்டுமின்றி பின்னணிப் பாடல், இசையமைப்பு எனப் பல துறைகளிலும் செயல்பட்டு வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக ‘ஹே ராம்’ படத்தில் அறிமுகமான சுருதிஹாசன், 2009-ம் ஆண்டு வெளியான இந்திப் படமான ‘லக்’ மூலம் கதாநாயகியாகத் தனது பயணத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது பிரபாஸுடன் ‘சலார்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
துல்கர் சல்மானுடன் அவர் நடித்த ‘ஏஓடி’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது வருகிறது. இதற்கிடையே, மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சுருதிஹாசன் நடித்துள்ள ‘டிரெயின்’ திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக, ‘அஸ்வின்ஸ்’ படத்தை இயக்கிய தருண் தேஜா இயக்கும் புதிய படத்தில் சுருதிஹாசன் நடிக்கவுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
