மறைந்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் உடலுக்கு சென்னையில் நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன், அவருடனான நீண்டகால நட்பு குறித்து உருக்கமாகப் பேசினார். சிங்கீதம் சீனிவாசராவுக்கு வயது அதிகமாக இருந்தாலும், அவரது மனமும் சிந்தனையும் எப்போதும் இளமையாகவே இருந்ததாக அவர் குறிப்பிட்டார். தனது வாழ்க்கையை செதுக்கிய முக்கியமானவர்களில் சிங்கீதம் சீனிவாசராவும் ஒருவர் என்றும், அவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லும் குணம் கொண்டவர் என்றும், அதுவே அவரது இளமையின் ரகசியம் என்றும் அவர் கூறினார்.
Add a Comment
