Advertisement

அக்டோபர் 30ல் வெளியாகும் யோகிபாபுவின் ‘சிங்காரம்’!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகிபாபு, தற்போது கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். ‘ஜெயிலர் 2’, ‘முக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அந்த வரிசையில் கே.வி. கதிர்வேலு இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய திரைப்படம் ‘சிங்காரம்’. சார்லி, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஏற்படும் மாற்றங்களையும், அதன்பிறகு அவன் மேற்கொள்ளும் உத்வேகமான பயணத்தையும் மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ராக் புரொடக்சன்ஸ் சார்பில் ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘சிங்காரம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply