“ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதுதான் என் இலக்கு!” – ஹிப் ஹாப் ஆதி

ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்த ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினர். அனந்திதா சுந்தர் தயாரித்துள்ள இப்படத்தில் சைத்ரா ஆச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வெற்றி விழாவில் பேசிய ஆதி, தனது படைப்புகளின் மூலம் தன்னுடைய உணர்ச்சிகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே தனக்கு முக்கியம் என்று தெரிவித்தார். தனது படங்களில் புத்துணர்ச்சியான அம்சம் இருக்க வேண்டும் என்பதையே அதிகம் எதிர்பார்ப்பதாகவும், ரசிகர்கள் நேர்மறையான மனநிலையுடன் படத்தை ரசித்து கொண்டாட வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் கூறினார்.

ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆதரவு சுதந்திரம் தான் என குறிப்பிட்ட அவர், ‘மீசைய முறுக்கு 2’ படத்தில் எந்தவித தலையீடும் இல்லாமல் தனது கலையை வெளிப்படுத்த தயாரிப்பு நிறுவனம் வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.ஒரு படைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முன்கூட்டிய கட்டுப்பாடுகளுடன் தான் செயல்படவில்லை என்றும், தனது படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு அடுத்தடுத்த பயணத்திற்கு நம்பிக்கை அளிப்பதாகவும் ஆதி தெரிவித்துள்ளார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading