லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய தேதியில் படம் திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜிஸ்குவாட் நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ளார். நிரஞ்சன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘கட்சி சேர’ பாடல் மூலம் கவனம் பெற்ற சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். சுவாரஸ்யமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
