‘ரங்கபலி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பவன் பாசம்செட்டி இயக்கத்தில் யோகி பாபு மற்றும் தெலுங்கு நடிகர் சத்யா இணைந்து புதிய காமெடி படத்தில் நடிக்கின்றனர். நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இணைந்து Dream Movie Makers, நயவாயு சித்ராலு நிறுவனங்கள் சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை இணைக்கும் பைலிங்குவல் கிராஸ்ஓவர் என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. குறிப்பாக, தெலுங்கு நடிகர் சத்யா தமிழிலும், தமிழ் நடிகர் யோகி பாபு தெலுங்கிலும் பேசும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் இன்று வெளியான நிலையில், இருவரது காமெடி கெமிஸ்ட்ரியை மையமாகக் கொண்ட கலகலப்பான படமாக இது இருக்கும் என்பதை கிளிம்ப்ஸ் உணர்த்துகிறது. மேலும், தெலுங்கு – தமிழ் சினிமாவின் பிரபலங்களை ஒன்றிணைக்கும் வித்தியாசமான முயற்சியாகவும் இப்படம் அமைந்துள்ளது.முதலில் சங்கராந்தி வெளியீடாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அந்த அறிவிப்பு மாற்றப்பட்டு இந்த ஆண்டுக்குள் படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
–
