‘டோரதி’ படத்தை பாராட்டிய ‘லப்பர் பந்து’ இயக்குநர்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ள இப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. திரையுலகைச் சேர்ந்த தனுஷ், ஸ்ரீலீலா, மணிரத்னம் உள்ளிட்ட பலரும் படத்தை பாராட்டியிருந்தனர். அந்த வரிசையில் ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவும் ‘டோரதி’ குறித்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘டோரதி’ போன்ற ஒரு படம் உருவானது பெருமையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள தமிழரசன் பச்சமுத்து, கார்த்திக் சுப்பராஜ் இருக்கும் அதே திரைத்துறையில் தானும் ஒரு பகுதியாக இருப்பதற்கும் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். இறுதியாக கார்த்திக் சுப்பராஜுக்கு சல்யூட் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் ராஜ் முருகனும் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். ‘டோரதி’ தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளில் ஒன்று என்று குறிப்பிட்ட அவர், பாலின ஏற்றத்தாழ்வுகளை கேள்விக்குள்ளாக்கும் படமாக இது இருப்பதாக தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ், கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading