‘தர்மன்’ படப்பிடிப்புக்காக மைசூரில் இருக்கும் ரஜினிகாந்த், இன்று அதிகாலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். ரஜினிகாந்த் கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள், அதிகாலையிலேயே கோயில் வளாகத்தில் திரண்டனர்.
வழிபாடு முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த், அங்கு கூடியிருந்த ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதையடுத்து அவர் கோயிலுக்கு வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘தர்மன்’ படத்தில் ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர், சோமநாதபுரா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது..
—
