“ஹீரோவின் மனைவிக்கு என்னைப் பிடிக்கவில்லை”.. பட வாய்ப்புகளை இழந்தது குறித்து டாப்சி பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்!

பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்சி பண்ணு, தனது திரைப்பயணத்தில் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்ததாகக் கூறிய டாப்சி, திடீரென அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் குறித்து கேட்டபோது, அந்த ஹீரோவின் மனைவிக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று கூறியதாகவும், அதற்கான காரணம் என்ன என்பது இன்றுவரை தனக்குத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றொரு படத்தில் ஒப்பந்தமாகி கால்ஷீட்டையும் ஒதுக்கியிருந்த நிலையில், எந்தத் தெளிவான காரணமும் தெரிவிக்காமல் தன்னை படத்திலிருந்து நீக்கியதாக டாப்சி கூறியுள்ளார். கதாநாயகனின் அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என தான் நினைத்ததாகவும், ஆனால் தன்னை நீக்கிய செய்தியை ஊடகங்கள் மூலமாகவே தெரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற அனுபவங்களுடன், “ராசி இல்லாத நடிகை” என்ற விமர்சனத்தையும் தான் எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரைத்துறைக்கு புதிதாக வந்த காலத்தில் சினிமா பற்றிய அனுபவம் இல்லாததால், படப்பிடிப்பில் நடக்கும் அனைத்துமே இயல்பான நடைமுறைகள் என்று நினைத்ததாகவும் டாப்சி தெரிவித்துள்ளார். ஒரு படப்பிடிப்பில் மிகவும் பாலியல் தன்மை கொண்ட காட்சி எடுக்கப்பட்டபோதும், அதன் தன்மையை அப்போது தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், படம் வெளியான பிறகுதான் அந்தக் காட்சி தேவையில்லாமல் படமாக்கப்பட்டிருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.

அதேபோல், தெலுங்கில் அறிமுகமான படத்தில் கவர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிக்காக தனது வயிற்றின் மீது தேங்காய் எறியப்பட்டதாகவும் டாப்சி தெரிவித்துள்ளார். “வயிற்றில் தேங்காய் அடிப்பதில் என்ன கவர்ச்சி இருக்கிறது?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading