“எல்லா படமுமே எனக்கு கம்பேக்தான்” – நிவின் பாலி!

‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நிவின் பாலி, தற்போது இயக்குநர் ராம் இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்துள்ளார். அஞ்சலி கதாநாயகியாகவும், சூரி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையே படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நிவின் பாலியிடம் தொடர்ந்து அவரது படங்களை ‘கம்பேக்’ என குறிப்பிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நீண்ட காலமாக ‘கம்பேக்’ என்ற வார்த்தையை கேட்டு வருவதால், தனது பெயரே ‘நிவின் பாலி கம்பேக்’ என மாறிவிட்டது போல இருப்பதாக நகைச்சுவையாக கூறினார்.

மேலும், தனது ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக கம்பேக் என குறிப்பிட வேண்டாம் என்றும், தன்னைப் பொறுத்தவரை தான் நடிக்கும் ஒவ்வொரு படமுமே ஒரு கம்பேக்தான் என்றும் நிவின் பாலி தெரிவித்துள்ளார். ‘ஏழு கடல் ஏழு மலை’ படமும் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல கம்பேக்காக அமைய வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரது படங்கள் வெளியாகி வரும் நிலையில், நிவின் பாலி தற்போது நயன்தாராவுடன் நடித்துள்ள ‘டியர் ஸ்டூடன்ஸ்’ படத்திலும் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading