“ராம் சார் பேசப் பேச எனக்கு தைரியம் வந்தது இந்த படத்தில் நடிக்கும்” – நடிகர் சூரி!

ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அக்டோபர் 1-ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், செப்.23-ம் தேதி சென்னையில் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது. இதில் பேசிய சூரி, இயக்குநர் ராமுடன் பணியாற்றியது குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

வெற்றிமாறன், மிஷ்கின், பாலா, ராம் உள்ளிட்ட முக்கியமான இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என சூரி தெரிவித்துள்ளார். வெற்றிமாறனுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அடுத்ததாக ராம் இயக்கத்தில் நடிக்க அழைப்பு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அருண் விஷ்வா மூலம் ராமுடன் அறிமுகமானதாக தெரிவித்த சூரி, முதலில் இந்த வாய்ப்பை ஏற்க சற்று தயங்கியதாகவும் கூறியுள்ளார். நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், ராம் போன்ற இயக்குநரின் படத்தில் நடிப்பது குறித்து பயமாக இருப்பதாக அருண் விஷ்வாவிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், ராம் சிறப்பாக சொல்லிக் கொடுப்பார் என நம்பிக்கை அளித்ததாக சூரி தெரிவித்துள்ளார்.

பின்னர் ராமின் அலுவலகத்திற்கு சென்றபோது, அங்கு புத்தகங்கள் நிறைந்திருந்ததை பார்த்ததாக சூரி தெரிவித்துள்ளார். அதன்பிறகு ராம் தன்னிடம் இயக்குநர் என்ற பாணியில் இல்லாமல் மிகவும் இயல்பாகவும் ஜாலியாகவும் பேசியதாகவும், தன்னைப் பற்றி அவர் தொடர்ந்து பேசியதால் நடிப்பது குறித்திருந்த பயம் போய் தைரியம் வந்ததாகவும் சூரி கூறியுள்ளார். அந்த அனுபவத்திற்குப் பிறகே ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடிக்க சம்மதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading