மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி வெளியாக உள்ளது. ராபர்ட் டவுனி ஜூனியர் இதில் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், டாம் ஹிடில்ஸ்டன், பால் ரூட், பெனடிக்ட் கம்பர்பேட்ச், செபாஸ்டியன் ஸ்டான், ஆண்டனி மேக்கி, பால் பெட்டனி உள்ளிட்ட மார்வெல் நட்சத்திரங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தில் அயர்ன்மேன் கதாபாத்திரத்தின் முடிவுடன் ராபர்ட் டவுனி ஜூனியரின் மார்வெல் பயணமும் நிறைவடைந்ததாக ரசிகர்கள் கருதினர். ஆனால், ‘டூம்ஸ்டே’ படத்தில் அவர்இல்லாமல் மீண்டும் தோன்றுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை அயர்ன்மேனாக டாக்டர் டூமாக அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் அயர்ன்மேன் கதாபாத்திரம் இடம்பெறாது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், படத்தின் தமிழ் டப்பிங் தொடர்பாகவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ தமிழ்ப் பதிப்பில் அயர்ன்மேனுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதியே, ‘டூம்ஸ்டே’ படத்தில் டாக்டர் டூம் கதாபாத்திரத்துக்கும் குரல் கொடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகாத நிலையில், மார்வெல் ரசிகர்கள் முந்தைய ‘அவெஞ்சர்ஸ்’ படங்களுக்கு பணியாற்றிய அதே டப்பிங் குழுவினரையே இந்தப் படத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
—
