72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு, ‘கேப்டன் மில்லர்’ மற்றும் ‘ராயன்’ ஆகிய படங்களுக்காக 2 தேசிய விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
விருது விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனுஷ் விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரிடம் தேசிய விருது பெற்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தனுஷ், தேசிய விருது பெற்றது மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், இது தனக்கு மிகப்பெரிய கவுரவம் என்றும் தெரிவித்தார். அப்போது புதிய கட்சி தொடங்குவது தொடர்பாகவும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு பதிலளிக்காமல் சிரித்தபடியே காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
