எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘வாரணாசி’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மகேஷ் பாபு தனக்கான படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மொத்த படப்பிடிப்பும் இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது.
ஆயிரம் கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘வாரணாசி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ராஜமௌலியின் இயக்கம், மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் கூட்டணி மற்றும் மிகப்பெரிய பட்ஜெட் காரணமாக இப்படம் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
