1700 நாட்களை கடந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சென்னை பி.வி.ஆர் திரையரங்கில் கடந்த 4 ஆண்டுகளாக தினமும் ஒரு காட்சியாக இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படங்களில் 1700 நாட்களை கடந்த முதல் படமாக ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சாதனை படைத்துள்ளது. விரைவில் 5 ஆண்டுகளை கடந்து திரையரங்கில் ஓடும் படமாகவும் புதிய சாதனையை உருவாக்க உள்ளது.

Add a Comment

Leave a Reply