கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா நடிக்கும் உலக சாதனை திரைப்படம்!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய கன்னட திரைப்படம், வெறும் 48 மணி நேரத்தில் உருவாக்கி முடிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னட இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜேஷ் கவுடா, தனது ‘ஆர்.ஏ. ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் மூலம் இந்த முயற்சியை முன்னெடுக்கிறார். திரைக்கதை உருவாக்கம், நடிகர்கள் தேர்வு, படப்பிடிப்பு, எடிட்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள், தணிக்கைச் சான்றிதழ் பெறுதல் மற்றும் திரையரங்க வெளியீடு என அனைத்து கட்டங்களையும் 48 மணி நேரத்திற்குள் நிறைவு செய்து கின்னஸ் உலக சாதனை படைப்பதே படக்குழுவின் இலக்காக உள்ளது. வரும் நவம்பர் மாதத்தில் இந்த முயற்சியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading