இசையமைப்பாளர் இளையராஜா தற்போது ஆஸ்திரேலியாவில் இசைச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 19ம் தேதி மெல்போர்னில் முதல் இசை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், பெர்த், சிட்னி, அடிலெய்டு மற்றும் பிரிஸ்பேன் நகரங்களிலும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், அவரது 50 ஆண்டுகால இசைப் பயணத்தை கவுரவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய பார்லிமென்டில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அமைச்சர் வெளியிட்ட இந்த தபால் தலைவை இளையராஜா பெற்றுக்கொண்டார்.

