குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகரும் இயக்குநருமான தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்துகொண்டார். ‘ராயன்’ திரைப்படத்திற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் கைகளால் தேசிய விருதை தனுஷ் பெற்றுக்கொண்டார். விழா நிறைவடைந்த பின்னர் தனது மகன்களுடன் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
Add a Comment
