சன் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ தொடர், விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகும் இந்தத் தொடர், தொடர்ந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 1500 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’, தற்போது 5 ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில் நிறைவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
Add a Comment
