மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்த ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாகி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் படக்குழுவினர் வெற்றி விழாவை நடத்தியுள்ளனர். இதையடுத்து சூரி தனது சொந்த ஊருக்கு சுகாஸ், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, பாலசரவணன் உள்ளிட்டோரை அழைத்து சென்று, குடும்பத்தினருடன் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடியுள்ளார். மேலும், படப்பிடிப்பு நடைபெற்ற ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மக்களுக்கும் விருந்து அளித்துள்ளார்.
Add a Comment
